இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சனத் ஜயசூரியவிடமிருந்து விவகாரத்து பெற்றுத் தருமாறு அவரது மனைவி நீதிமன்றில் மனு தாக்கல் செய்துள்ளார்.Ms. Sandra Tania Rosemary De Silva என்ற சனத் ஜயசூரியவின் மனைவியே இவ்வாறு விவகாரத்து கோரியுள்ளார்.கொழும்பு மாவட்ட நீதிமன்றில் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.தமக்கும் தமது பிள்ளைகளுக்கும் 800 மில்லியன் ரூபா நட்ட ஈடு வழங்குமாறும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு பில்லியன் ரூபாவிற்கு மேல் சொத்துக்களை உடைய சனத் ஜயசூரிய பிள்ளைகளின் பாவனைக்காக இரண்டு மோட்டார் கார்களையும் வழங்க வேண்டுமென Sandra கோரியுள்ளார்.தற்போது வசித்து வரும் வீட்டையும் முழுமையாக நிர்மாணித்து தருமாறும் கோரியுள்ளார்.
வழக்குத் தாக்கல் செய்துள்ள Sandra , சனத் ஜயசூரியவின் இரண்டாவது மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.முதல் மனைவியை சனத் ஜயசூரிய விவாகரத்து செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment