
சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும் இலங்கையின் முன்னாள் கால்பந்து பிரதானியுமான மணிலால் பெனாண்டோவிற்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA ) இத்தடையை விதித்துள்ளது.
2004ம் ஆண்டு சுனாமி காலத்தில் கால்பந்து வளர்ச்சி மற்றும் பேரழிவு நிவாரண நிதியை முறைக்கேடாக பயன்படுத்தியதாக மணிலால் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் பல சட்டதிட்டங்களை மீறி மணிலால் செயற்பட்டுள்ளார் என நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு 8 வருட தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் அவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment