Friday, December 27, 2013

முடிவுக்கு வந்திருக்கும் 2013 ஏராளமான நல்ல படங்களை தமிழ் சினிமாவிற்கு தந்திருக்கிறது. சில அறிமுக நாயகர்கள் முன்னுக்கும், சில முன்ணணி நாயகர்களை பின்னுக்கும் தள்ளியிருக்கிறது.

இந்த கணிப்பீடு எவ்விதமான பக்கச் சார்புமின்றி தொகுக்கப்பட்டிருக்கிறது. படங்களில், அதிக வருமானத்தை பெற்றவை, அதிக நாட்கள் ஓடியவை, மக்கள் மனதை வென்றவை, அதிக விருதுகள் வென்றவை என பல வேறுபாடுகள் இருக்கின்றன.  பலவகையில் முதல் பத்து படங்களை தெரிவு செய்யலாம். மக்கள் மனதை வென்றவை விருது வெல்ல வேண்டும் என்றில்லை.

அந்த வகையில் ஒரு படம் தயாரிப்பிற்கான பணச்செலவு, பொருட்செலவு, கால விரயங்களுடன் அப்படத்தின் வருமானம் ஒப்பிடப்பீடு செய்யப்பட்டு ஒரு பொதுவான தரவுகளின் கணிப்பிலேயே இந்தப் படங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

தமக்கு பிடித்த படங்கள், நாயகர்களின் படங்கள் இடம் பெறவில்லை, அல்லது தாம் விரும்பிய ஒழுங்கில் அமையவில்லை என்பதற்காக இதனை நிராகரிப்பவர்களும் இருப்பர்.  தரவுகளில் இருந்து திரட்டப்படும் தொகுப்பு எல்லோரையும் திருப்திப்படுத்த முடியும் என்று சொல்லிவிட முடியாது. அந்த வகயில் இந்த வருடம் (2013 ) ஆண்டில் வெளிவந்த படங்களை தொகுப்போம் வாங்க..................

விஸ்வரூபம் :

top10_movies_v4t (10)

இந்திய உளவாளி கமல் முஸ்லீம் தீவிரவாதத்தை ஒழிக்க பாடு படும் கதை

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஆரம்பம் :

top10_movies_v4t (1)

இழப்புகளால் கொதிப்படையும் நேர்மையான அதிகாரி , காரணமானவர்களை பழிவாங்கி கறுப்பு பணத்தை இந்திய அரசிடம் சேர்ப்பிக்கிறார்

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ராஜா ராணி :

top10_movies_v4t (4)

சோகமான இறந்த காலத்தை உடைய இருவர் பெரியவர்கள் திருப்பதிக்காக திருமணம் செய்து கொண்டு ,படும் , படுத்தும் அவஸ்தை. அவர்கள் மனமொத்து இணைகிறார்கள் என்பதே கதை.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

வணக்கம் சென்னை :

top10_movies_v4t (8)

மனசுக்கு பிடித்த பெண்ணை சந்திப்பதும், இழப்பதும்,  மீண்டும்  எப்படி சேர்கிறார்கள் என்பதே ஒரு வரியில்  கதை
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
வருத்தப்படதாத வாலிபர் சங்கம் :

top10_movies_v4t (9)

வெட்டிப்பயல் நாயகன் வேலைகளும் , நாயகியை ரூட்டு விடுறதே முழுப்படமும்

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

எதிர் நீச்சல் :

top10_movies_v4t (3)

மேலோட்டமாக பார்த்தால் ஒரு பெயருக்காக அவ்வளவு அக்கப்போரா என்றிருக்கும், ஆனால் நம்பிக்கையை தூண்டும் படம். சில பேரின் பல படிநிலைகளை வெளிச்சம் போட்டிருக்கிறது

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தலைவா :

top10_movies_v4t (6)

தந்தயை இழந்த தனயன். தன்னை  நம்பும் மக்களுக்காக தன் வாழ்க்கை முறையையே மாற்றியமைக்கும் ஓர் இளைஞன்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

சென்னையில் ஒரு நாள் :

top10_movies_v4t (2)

மிக நெரிசலான சாலைப் போக்குவரத்துக்கு மத்தியில் சென்னையில் இருந்து வேலூர் வரை செல்வதுதான் படம்

 ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

சிங்கம் 2 : 

top10_movies_v4t (5)

கடமையுணர்ச்சியுடைய ஒரு பொலிஸ் அதிகாரி , சமூக விரோதிகளை பந்தாடும் கதை. ஏற்கனவே வெளிவந்த சிங்கம் படத்தின் தொடர்ச்சியாகவே கதை நகர்கிறது.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தீயா வேலை செய்யணும் குமாரு :

top10_movies_v4t (7)

காதலுக்காக அடுத்தவன் உதவி கோரும் ஒரு பையனும், அவன் கேட்பது தன் தங்கைக்கு என்று தெரியாமலே உதவும் அண்ணனுக்கும் இடையேயான போராட்டம் நகைச்சுவையாக நகர்கிறது.

0 comments:

Post a Comment

Bookmark Us

Delicious Digg Facebook Favorites More Stumbleupon Twitter

Search