Thursday, December 19, 2013

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் 11 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.


1436357590tanvirr630

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 322 ஓட்டங்களைப் பெற்றது. பாகிஸ்தான் அணி சார்பில் மொஹமட் ஹபீஸ் 122 ஓட்டங்களையும் சொஹிப் மஸ்சூத் 71 ஓட்டங்களையும் சர்ஜீல் கான் 61 ஓட்டங்களையும் பெற்றனர். இலங்கை சார்பில் சுரங்க லக்மால் 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

பதிலுக்கு 323 என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 311 ஓட்டங்களை பெற்று 11 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. இலங்கை அணி சார்பில் ஜனித் பெரேரா 64, சந்திமால் 46, பிரசன்ன 42, சேனாநாயக்க 42 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் ஜுனைட் கான் மூன்று விக்கெட்களையும் அப்ரிடி 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

0 comments:

Post a Comment

Bookmark Us

Delicious Digg Facebook Favorites More Stumbleupon Twitter

Search