பாகிஸ்தான் மாடலும் நடிகையுமான வீணா மாலிக். இவர் பிக்பாஸ் என்ற ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலமானார். இவருக்கு வயது 29 ஆகிறது.
தற்போது வீணா மாலிக் துபாயைச் சேர்ந்த தொழில் அதிபர் ஆசாத் பஷிர்கான் காத்தக் என்பவரை திடீர் திருமணம் செய்து கொண்டார் ஆசாத் பஷீர் கான் துபாயிலும் அமெரிக்காவிலும் பல்வேறு தொழில் நிறுவனங்கள் நடத்தி வருகிறார். இவர்களது திருமணம் தூபாயில் நடந்தது.
இது குறித்து வீணா மாலிக் கூறுகையில், இது பெரியோர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம். நான் இன்று மகிழ்ச்சியாக இருக்கிறேன். உலகிலேயே அதிக மகிழ்ச்சியுடன் உள்ள பெண்ணாக நான் உணர்கிறேன் என்று கூறி உள்ளார்.
இது குறித்து அவர் தனது டுவீட்டர் இனையதளத்தில் நான் எனது துணையை தேடிக் கொண்டேன். அவர் எனது நண்பர் எனது பார்ட்டனர் என கூறி உள்ளார்.
0 comments:
Post a Comment