Wednesday, December 18, 2013

தன்னை விட இளையவரை காதலித்த காம்னா, இருதரப்பு பெற்றோர் எதிர்ப்பை மீறி பிடிவாதம் பிடித்ததால் ரகசிய திருமணம் செய்ததாக செய்தி வெளியாகியுள்ளது.


ஜெயம் ரவியுடன் இதயத்திருடன் படத்தில் அறிமுகமாகி, பின்னர் தெலுங்கு கன்னடத்தில் பிரபலமானவர் காம்னா. சமீபத்தில் தன் காதலரை திடீரென ரகசிய திருமணம் செய்துகொண்டதாக தகவல்கள் வெளியானது. பெங்களூரைச் சேர்ந்த சுராஜ் என்ற தொழிலதிபரை சில ஆண்டுகளாக காம்னா காதலித்து வந்தார். தனது சினிமா நண்பர்களுக்குக் கூட இந்த திருமணம் குறித்து தகவல் தராமல் இந்த திருமணத்தை முடித்துவிட்டார்களாம். காம்னாவுக்கு வயசு 28. அவர் காதலருக்கு காம்னாவை விட சில ஆண்டு வயது குறைவாம். தன்னைவிட வயதில் குறைந்தவரை காதல் செய்ததால் முதலில் இருவீட்டிலும் எதிர்ப்பு இருந்ததாம். ஆனால், காதலர்கள் பிடிவாதமாக இருந்ததால் பின்னர் இருவீட்டினரும் சம்மதித்து, காதும்-காதும் வைத்தது போல் திருமணம் செய்துவைத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.


17-kamna-jethmalani--10-600மேலும், காம்னாவை தனது மகனுக்குத்தான் திருமணம் செய்துவைக்க வேண்டும் என்று அவரது உறவினர் ஒருவர் தகராறு செய்து வந்ததால் திருமணத்தை வெகுவிமரிசையாக செய்யாமல் ரகசியமாக முடித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment

Bookmark Us

Delicious Digg Facebook Favorites More Stumbleupon Twitter

Search