Friday, December 27, 2013

ஸ்ரீதேவி


actress_80s_v4t-8


ஸ்ரீதேவி ஆகஸ்ட் 13, 1963 அன்று தனது தந்தையின் சொந்த ஊரான சிவகாசியில் பிறந்தார். அவரது தாயார் திருப்பதியைச் சேர்ந்தவர். எனவே ஸ்ரீதேவி தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளை அறிந்தவராக வளர்ந்தார். அவருக்கு ஸ்ரீலதா என்ற சகோதரியும் சதீஷ் என்ற (வளர்ப்பு) சகோதரரும் உள்ளனர். 1996 ஆம் ஆண்டு இந்தி தயாரிப்பாளரான போனி கபூரின் இரண்டாந்தாரமாக திருமண பந்ததில் இணைந்தார். இவர்களுக்கு ஜான்வி, குஷி என்ற இரு மகள்கள் உள்ளனர். நீண்ட இடைவேளைக்குப் பின் ஸ்ரீதேவி 2012 இல் நடித்த இங்கிலிஷ் விங்கிலிஷ் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மீண்டும் திரையுலகில் கவன்ம் செலுத்தி வருகிறார்.


சுஹாசினி


actress_80s_v4t-9


1961 ஆகஸ்ட் 15 ம் தேதி சென்னையில் பிறந்த சுஹாசினி தென்னிந்திய சினிமாவில் தனது படைப்புகளால் பிரபலமானவர். நடிகர் கமலஹாசனின் சகோதரர் சாரிஹாசனின் மகளான சுஹாசினி, 1980 இல் ’நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படம் மூலம் தனது திரை வாழ்க்கையை ஆரம்பித்த சுஹாசினி, தனது முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதை வென்றார். 1986 இல் வெளியான சிந்துபைரவி படத்துக்காக தேசிய விருது பெற்ற சுஹாசினி, தற்போதும் திரையுலகில் கவனம் செலுத்தி வருகிறார். 1988 இல் இயக்குநர் மணிரத்னத்தை மணமுடித்தார். இவர்களுக்கு ஸ்ரவன் என்ற ஒரு மகன் உண்டு.


ரேவதி


actress_80s_v4t-7


கேரளாவில் 1966 ஜூலை 8 ம் தேதி பிறந்த ரேவதியின் இயற்பெயர் ஆஷா கெலுனி குட்டி. ரேவதி தமிழ், கன்னடம், தெலுங்கு,மலையாளம் மற்றும் இந்திப்படங்களில் நடித்துள்ளார். இவர் பல திரைப்படங்களையும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் இயக்கியுள்ளார். 1982 இல் சுரேஷ் மேனனை மணந்த ரேவதி 2002 இல் அவரிடமிருந்து விவாகரத்து பெற்றார்.


பானுப்ரியா


1966 ஜனவரி 15 ம் தேதி ஆந்திராவில் பிறந்த பானுப்ரியா, தனது 17வது வயதில் திரையுலகில் பிரவேசித்தார். தமிழில் அவரது முதல் படம் 1983 இல் வெளியான ‘மெல்லப் பேசுங்கள்’. தென்னிந்தியாவில் பரதத்தில் மிகப்பிரபலமாக இருந்தவர் பானுப்ரியா. தற்போதும் திரைப்படங்களில் நடித்துவருகிறார்.


20855-bhanupriya.jpg

அம்பிகா


1962 நவம்பர் 6 ம் தேதி கேரளாவில் பிறந்த அம்பிகா, 80 களில் மிகப்பிரபலமான கதாநாயகியாக வலம் வந்தவர். அம்பிகாவும் அவரது சகோதரி ராதாவும் சேர்ந்து ஆரம்பித்த கலையகம் "ARS ஸ்டுடியோஸ்". அம்பிகா இருமுறை மணமுடித்தவர். சின்னு ஜோன் என்ற அமெரிக்க வாழ் இந்தியரை முதலில் மணந்த அம்பிகாவுக்கு அவர் மூலம் இரு மகன்கள் உள்ளனர். அவரை விவகரத்து செய்த அம்பிகா, ரவிகாந்த்தை இரண்டாவதாக மணந்தார்.


actress_80s_v4t-1

ராதா


1965 ஜூன் 3 ம் தேதி கேரளாவில் பிறந்த ராதா, 1981 இல் பாரதிராஜாவின் ‘அலைகள் ஓய்வதில்லை’ படம் மூலம் அறிமுகமானார். இவரது இயற்பெயர் உதய சந்திரிகா. சூப்பர் ஹிட்டான அப்படம் ராதாவுக்கு பல படவாய்ப்புக்களை வாங்கித்தந்தது. ராதா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் 200 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். ராஜசேகரன் நாயரை திருமணம் செய்து சிலகாலம் திரையுலகிலிருந்து ஒதுங்கியிருந்த ராதா, மீண்டும் திரையுலகிற்கு திரும்பியுள்ளார். இவரது மகள்களான கார்த்திகா, துளசி ஆகியோர் தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளனர். தனது மகனான விக்னேஷையும் திரையுலகிற்கு அறிமுகப்படுத்த ராதா முயற்சி எடுத்து வருகிறார்.


actress_80s_v4t-1


அமலா


1968, செப்டம்பர் 12 அன்று பெங்காலில் பிறந்த அமலா, டி.ராஜேந்தரின் ‘மைதிலி என்னை காதலி’ திரைப்படத்தின் மூலம் 1986 இல் அறிமுகமானார். பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டான அப்படம் அமலாவுக்கு நல்ல வாய்ப்புக்களை பெற்றுக்கொடுத்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி படங்களில் நடித்துள்ளார். 1992 இல் நாகார்ஜுனை இரண்டாவதாக திருமணம் செய்த அமலாவுக்கு அகில் என்ற மகன் உண்டு. அமலா ஒரு சமூக ஆர்வலர். அவர் பல சமூக சேவைகளில் பங்கேற்றுக் கொள்வதில் தனது நேரத்தை செலவிடுகிறார்.


Amala Nagarjuna in Saree Cute Stills


குஷ்பு


1970 செப்டம்பர் 29 இல் மும்பையில் பிறந்த குஷ்புவின் இயற்பெயர் நக்கத் கான். குஷ்புவுக்கு மூன்று சகோதரர்கள் உள்ளனர். 1980 இல் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் பிரவேசித்த குஷ்பு, தமிழில் ‘வருஷம் 16’ 1989 இல் கதாநாயகியாக அறிமுகமானார். இயக்குநர் சுந்தர்.சியை திருமணம் செய்த இவருக்கு இரு மகள்கள் உள்ளனர். திரையுலகம், அரசியல் என பன்முகம் கொண்டவர் குஷ்பு.


actress_80s_v4t-5


ராதிகா


ஆகஸ்ட் 21, 1963 இல் பிறந்த ராதிகா, தனது 16வது வயதில் பாரதிராஜாவின் ‘கிழக்கே போகும் ரயில்’ மூலம் திரையுலகில் அறிமுகமானார்.நகைச்சுவை நடிகர் M. R.ராதாவின் மூத்த மகளான ராதிகா, தமிழ்,தெலுங்கு,கன்னடா,மலையாளம் மற்றும் இந்திப் படங்களில் நடித்துள்ளார். சரத்குமாரை மூன்றாவதாக திருமணம் செய்த ராதிகாவுக்கு அவர் மூலம் ராகுல் என்ற மகன் உண்டு. முதலாவதாக இயக்குநர் பிரதாப் போத்தனையும் இரண்டாவதாக ரிச்சார்ட் ஹென்றி என்ற வெளிநாட்டவரையும் திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர் ராதிகா.


actress_80s_v4t-6


கெளதமி


1968 ஜூலை 2 இல் ஆந்திராவில் பிறந்த கெளதமி, குருசிஷ்யன் படம் மூலம் அறிமுகமானார். 1998 இல் தாவா யஷ்வந்த்தை திருமணம் செய்த கெளதமியின் மணவாழ்க்கை ஒரு வருடத்திலேயே முடிவுக்கு வந்தது. இருவருக்கும் சுபலக்‌ஷ்மி என்ற மகள் உண்டு. பின் 2005 இலிருந்து கமலஹாசனுடன் சேர்ந்து வாழ்ந்து வரும் கெளதமி, புற்றுநோய் தாக்கத்துக்கு ஆளாகி மீண்டுள்ளார். தற்போது ஆடை வடிவமைப்பில் கவனம் செலுத்தி வருபவர், விரைவில் மீண்டும் திரையுலகில் தடம்பதிக்க எண்ணியுள்ளார்.


actress_80s_v4t-4


0 comments:

Post a Comment

Bookmark Us

Delicious Digg Facebook Favorites More Stumbleupon Twitter

Search