Thursday, December 19, 2013

தமிழில் கேப்டன் விஜயகாந்த் நடித்த ரமணா படத்தின் ரீமேக் பாலிவுட்டில் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படம் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருக்கிறது. பிளாஸ்பேக் காட்சிகளான சிம்ரன் நடித்த பகுதிகள் மட்டும்தான் பாக்கி இருக்கிறது.


Akshay-youthplanet


இந்த படத்துக்கு Gabbar என பெயரிடப்பட்டுள்ளது. இதில் விஜயகாந்த் வேடத்தில் அக்ஷயகுமார் நடிக்கிறார். சிம்ரன் வேடத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். இந்த கேரக்டரில் நடிக்க முதலில் அமலாபால் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் பாலிவுட்டில் அவருக்கு மார்க்கெட் இல்லாததால், அவரை நீக்கிவிட்டு ஸ்ருதிஹாசனை தேர்ந்தெடுத்தனர் படக்குழுவினர்.


மேலும் ஒரு பாடல் காட்சியில் அக்ஷயகுமாரும், ஸ்ருதிஹாசனும் உதட்டுடன் உதடு சேரும் முத்தக்காட்சியை கடந்த இரண்டு நாட்களுக்கு முன் மும்பையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் படமாக்கினார் இயக்குனர் கிரீஷ். இந்த முத்தக்காட்சி நன்றாக வரவேண்டும் என்பதற்காக பத்து டேக்குகள் வரை எடுக்கப்பட்டது. ஒவ்வொரு தடவையும் சலிக்காமல் முத்தம் கொடுத்து அசத்தினார் ஸ்ருதிஹாசன். பத்தாவது டேக்கில்தான் திருப்தி அடைந்தார் கிரீஷ். இவர் தெலுங்கில் வானம் படத்தை எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏ.ஆர்.முருகதாஸின் கதைக்கு இவர் திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.


இந்த படத்திற்கு Sajid-Wajid என்ற இரட்டையர்கள் இசையமைக்கின்றனர். தமிழில் யூகிசேது நடித்த முக்கியமான கேரக்டரில் நம்மூர் பிரகாஷ்ராஜ் நடிக்கிறார். ராம்லீலா படத்தை தயாரித்த சஞ்சய் லீலா பஞ்சாலி இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த படம் வரும் கிறிஸ்துமஸ் தினத்தன்று ரிலீஸாக இருந்தது. ஆனால் தயாரிப்பு தாமதம் காரணமாக அடுத்த மாதம் திரைக்கு வருகிறது

0 comments:

Post a Comment

Bookmark Us

Delicious Digg Facebook Favorites More Stumbleupon Twitter

Search