Tuesday, December 24, 2013









K.S.Ravikumar-reel-3
பதவி வரும் போது பணிவும் வரவேண்டும்



துணிவும் வரவேண்டும் தோழா!

என்ற கவிஞரின் வரிகளுக்கு திரையுலகில் உதாராணமாக திகழ்பவர் இயக்குநர் கே.எஸ். ரவிகுமார். திரையுலகில் ஒரு படைப்பாளியாக நுழைவது கடினம். அதில் வெற்றி பெறுவது மிக கடினம். அதனை தக்கவைத்துக் கொள்வது மிக மிக கடினம். இதில் இருபத்தைந்து வருடங்களாய் ஒரு படைப்பாளியாய் ஒரு இயக்குநராய் வாழும் கலைஞன் கே.எஸ்.ரவிகுமார்!

ஒரு வளரும் கலைஞரைப் பாராட்டுவது அவரை ஊக்கப்படுத்துவதாகும். கே.எஸ்.ரவிகுமார் போன்ற வளர்ந்த கலைஞரைப் பாராட்டுவது, அவரது உழைப்பைப் போற்றுவதாகும். பரம்பரை பணக்கார குடும்பத்தில் பிறந்தாலும் பழகுவதற்கு எளிமையானவராய், இன்சொல் பேசுபவராய், ஈரநெஞ்சம் உடையவராய் மட்டுமில்லாமல் வெற்றி மகுடங்கள் பலவற்றைச் சுமந்தாலும் அதனால் தலைக்கணம் ஏறாமலிருக்கும் கே.எஸ்.ரவிகுமார் நம் தமிழ் திரைப்பட இயக்குநர்களில் வித்தியாசமானவர்.

தன்னுடன் பழகிய நண்பர்களாகட்டும், தன்னிடம் துணை இயக்குநராகப் பணிபுரிந்த இயக்குநர்களாகட்டும், தனக்கு இயக்கும் வாய்ப்பு தந்த தயாரிப்பாளர்களாகட்டும் அவர்கள் அனைவருக்கும் அன்றிலிருந்து இன்று வரை நன்றியுடன் இருப்பவர் கே.எஸ்.ரவிகுமார். ஒரு மனிதன் அனைவருக்கும் நண்பனாய் இருப்பது அபூர்வம். எதிரிகளே இல்லாமல் இருப்பது மிக அபூர்வம். அப்படி ஒரு அபூர்வ மனிதன்தான் கே.எஸ்.ரவிகுமார்.

ரகுவரனில் ஆரம்பித்து கமல், ரஜினி உட்பட அத்தனை நட்சத்திரங்களையும் இயக்கிய நாட்டாமை இயக்குநர் இவர். ஒரு இயக்குநர் ரஜினிக்கு நண்பராக இருக்கலாம், கமலுக்கு நண்பராக இருக்கலாம், ஆனால் இருவருக்கும் நெருக்கமான நண்பராக இருக்கும் வாய்ப்பு கே.எஸ்.ரவிகுமார் போன்று எல்லோருக்கும் கிடைத்துவிடாது. அந்த இரு துருவங்கள் மட்டுமின்றி சரத்குமார், சத்யராஜ், பிரபு, கார்த்திக், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு, ஆர்யா, ஜெயம் ரவி, விஷால், ஜீவா என முன்னணி கதாநாயகர்கள் அனைவருக்கும் நண்பராய் திகழ்பவர் இவர்.

வருடா வருடம் தன்னுடைய பிறந்த நாளோடு ஒரு படைப்பாளியின் சாதனையும் கொண்டாடுவது ராஜ் தொலைக்காட்சியின் வழக்கம். அந்த அடிப்படையில் இருபதாவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் ராஜ் தொலைக்காட்சி வெள்ளி விழா ஆண்டில் அடி எடுத்து வைக்கும் நாட்டாமை இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் என்ற படைப்பாளியை போற்றும் விதமாக என்றென்றும் ரவிகுமார் என்ற பெயரில் மாபெரும் பாராட்டுவிழா எடுக்கிறது.

இந்த விழா 2014 ஜனவரி 4-ம் ஆண்டு தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மாலை 5.30 மணிக்கு தொடங்கி கோலாகலமாக நடைபெற உள்ளது. பத்மஸ்ரீ கமல்ஹாசன் அவர்கள் கே.எஸ்.ரவிகுமாருக்கு நினைவுப் பரிசை வழங்கவிருக்கும் இந்த வெற்றி விழாவில் திரையுலகை சேர்ந்த பிரபல நட்சத்திரங்கள் பலரும் பங்குபெரும் கலைநிகழ்ச்சிகளும், இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் படங்களுக்கு இசையமைத்த பல இசையமைப்பாளர்கள் பங்குபெரும் இசை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளன.



0 comments:

Post a Comment

Bookmark Us

Delicious Digg Facebook Favorites More Stumbleupon Twitter

Search