சமீபத்தில் வெளிவந்த 'என்றென்றும் புன்னகை' படமானது மிகவும் சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது. ஆகவே இந்த படத்தின் வெற்றிக் கொண்டாட்டமானது சமீபத்தில் நடைபெற்றது. இதில் படத்தில் நாயகி த்ரிஷா மிகவும் க்யூட்டாக பிங்க் நிற உடையில் வந்திருந்தார். அதுமட்டுமின்றி, இவ்வுடையில் நடிகை த்ரிஷா கொஞ்சம் கூட இளமையில் மாற்றம் தெரியாதவாறு, டீன் ஏஜ் பெண் போல் தான் காணப்படுகிறார். நடிகை த்ரிஷா 'என்றென்றும் புன்னகை' படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது அணிந்து வந்த பிங் நிற டாப்ஸானது கவுரி மற்றும் நைனிகா வடிவமைத்தது. இந்த உடைக்கு இவர் பொருத்தமாக கருப்பு நிற ஃபிட்டான ஜீன்ஸ் அணிநிது வந்திருப்பது, அந்த டாப்ஸிற்கு மிகுந்த அழகை சேர்க்கிறது. மேலும் த்ரிஷா இந்த உடைக்கு கருப்பு நிற ஹீல்ஸ் அணிந்து வந்ததோடு, உடைக்கு பொருத்தமான மேக் அப் போட்டு வந்திருந்தார். அதுவும் அவர் போட்டிருந்த அடர் சிவப்பு நிற லிப்ஸ்டிக், அவரது சிரிப்பையும், உடையின் அழகையும் அதிகரித்து வெளிப்படுத்தியது. மேலும் எவ்வளவு தான் பொருத்தமில்லாத நீல நிற மெட்டாலிக் நெயில் பாலிஷ் போட்டிருந்தாலும், அவரது அழகிற்கு முன்பு அது எல்லாம் தெரியவில்லை. த்ரிஷாவின் இந்த ஸ்டைலைப் பற்றி நீங்க என்ன சொல்றீங்க...? உங்களுக்கு இவரோட ஸ்டைல் பிடிச்சுருக்கா..?

0 comments:
Post a Comment