''
வழக்கமா இப்படி ரெண்டு மாஸ் நட்சத்திரங்களை வெச்சு படம் பண்ணும்போது பயங்கர பிரஷர் இருக்கும். ஆனா, ரெண்டு பேரோட நட்பு கெமிஸ்ட்ரி எங்களுக்கு அந்தக் கவலையே இல்லாமபண்ணிருச்சு. லால் சார் ஒரே டேக்ல ஷாட் ஓ.கே. பண்ணிடுவார். ஆனாலும், நான் ரெண்டு, மூணு டேக் கேட்பேன். அதனால என்னை 'ஒன்ஸ்மோர் டைரக்டர்’னு கிண்டலடிப்பார்.ஒருநாள் லால் சார் குடும்பத்தை தன் வீட்டுக்கு வரவழைச்சு பிரியாணி விருந்து கொடுத்தார் விஜய். இன்னொரு சமயம் விஜய் குடும்பத்தை, தன் ஈ.சி.ஆர். வீட்டுக்கு அழைச்சு கேரள ஸ்டைல் விருந்து கொடுத்தார் லால். அங்கே வீடு முழுக்க ஓவியங்கள். காரணம், அவரே ஒரு ஓவியர். விருந்து முடிஞ்சதும், தானே வரைஞ்ச ஆறடி உயர விஜய் ஓவியத்தை ஆச்சர்யப் பரிசாக் கொடுத்தார் லால் சார். அப்போ விஜய் முகத்துல சந்தோஷத்தைப் பார்க்கணுமே... திக்குமுக்காடிப் போயிட்டார்!''

0 comments:
Post a Comment