
தன் மீது பதிந்துள்ள 'ப்ளேபாய் இமேஜை' மாற்றும் முயற்சியில் தீவிரமடைந்துள்ளார் சித்தார்த். அதன் காரணமாக, 'ஜிகர்தண்டா' படத்தில் ஆக் ஷன் அரிதாரம் பூசியுள்ளார். மதுரைக் கதை களத்தில் உருவாகியுள்ள இப்படத்துக்காக, தன் ஜீன்ஸ், டீ-சர்ட்டை கழற்றி வைத்து விட்டு, லுங்கியும், பனியனுமாக கோதாவில் குதித்திருக்கிறார் சித்தார்த். 'மதுரை கதை என்றாலே ஹிரோக்கள் அரிவாளும் கையுமாக திரிவார்களே, இதில் நீங்கள் எப்படி வருகிறீர்கள்' என்று சித்தார்த்தை கேட்டால், 'சில படங்களின் வெற்றியை கருத்தில் கொண்டு, அரிவாள் இல்லாத மதுரை இல்லை என்ற நிலை உருவாகி விட்டது. ஆனால், 'ஜிகர்தண்டா'வை பொறுத்த வரை, அரிவாள், கம்பு கலாசாரத்தை உடைக்கிற படமாக இருக்கும்' என்கிறார் சித்தார்த்.
0 comments:
Post a Comment