Friday, December 6, 2013

பென்சில்’, 'ஈட்டி’, 'வீர தீர சூரன்’ என அடுத்தடுத்து படங்கள், ஊதா கலரு ரிப்பன் ஸ்ரீதிவ்யாவுக்கு. அந்த அழகு வெப்பனுடன் அடித்த அரட்டை...

''இப்போ தமிழ்நாடே உங்க அப்பா யாருன்னுதான் பாடிட்டிருக்கு. சொல்லிட வேண்டியதுதானே?''

''என் அப்பா ஆந்திராவில் போலீஸ் ஆபீஸர். (அடியாத்தி!) அதுக்காக வீட்டுல விறைப்பும் முறைப்புமா இருக்க மாட்டார். அவரை போன்ல பிடிக்கிறதே கஷ்டமான விஷயம். அந்த அளவுக்கு வேலையில் சின்சியர் அண்ட் பிஸி. நானும் ஷூட்டிங் இல்லாதப்போ அவரை டிஸ்டர்ப் பண்ணாம, அம்மாவே கதின்னு கிடப்பேன்.''

''என்னது போலீஸ் ஆபீஸரா? பசங்க இனிமே கொஞ்சம் யோசிச்சுதான் பாடுவாங்க இல்ல..?''

''பாடுறது என்ன? என்கிட்ட பேசுறதுக்கே பசங்க பயப்படுவாங்க. அதுக்குக் காரணம் அப்பா இல்லை. நான் படிச்சது ஆர்மி ஸ்கூல். மேனேஜ்மென்ட் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருப்பாங்க. அதனால அங்கே படிக்கிற பசங்களுக்குப் பொண்ணுங்ககிட்ட பேசணும்கிற நினைப்புகூட வராது.''

''அப்படின்னா பாய் ஃப்ரெண்ட்ஸுக்கும் வாய்ப்பு இல்லை. அப்படித்தானே?''

''பாய் ஃப்ரெண்ட்ஸ் என்ன? ஃப்ரெண்ட்ஸுக்கே வாய்ப்பு இல்லை... ஒண்ணாங்கிளாஸ் சேர்ந்ததுல இருந்து, இப்போ பிஏ படிக்கிற வரை... எனக்கு ரெண்டே ரெண்டு ஃப்ரெண்ட்ஸ்தான். அப்புறம் அம்மாவும் தங்கச்சியும் பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ்... அவ்ளோதான்.''

 Sri-divya-


''அப்படின்னா அரட்டை அடிக்கிறதுக்கெல்லாம் சான்ஸே இல்லை?''

''யார் சொன்னது? நான் வெளியே பார்க்கிறதுக்கு மட்டும்தான் டீசன்ட்டா இருப்பேன். வீட்டுல சரியான லோக்கல் பார்ட்டி. தங்கச்சிகூட சேர்ந்துக்கிட்டு அம்மாவைப் படுத்தி எடுக்கலைன்னா, தூக்கமே வராது. சின்னப்பொண்ணு மாதிரி சேட்டை பண்ணுவேன். அப்படின்னா நீங்க சின்னப்பொண்ணு இல்லையானு கேட்டுடாதீங்க... ரொம்ப சின்னப் பொண்ணு மாதிரி சேட்டை பண்ணுவேன்னு சொல்லவந்தேன்.''

''தமிழ் ஆடியன்ஸ் எப்படி?''

'' தமிழ்ப் பசங்க எப்படி இருக்காங்கன்னு நான் இன்னும் ஆராய்ச்சி பண்ண ஆரம்பிக்கலை... அதை முடிச்சிட்டு முழுசா சொல்றேன். மத்தபடி, இப்போதைக்கு சரியா தமிழ் தெரியாதது மட்டும்தான் குறை. கவலைப்படாதீங்க... அடுத்தடுத்து கமிட் ஆகியிருக்கிற மூணு படங்கள் முடியுறதுக்குள்ள, தமிழை நல்லாக் கத்துக்கிட்டு ஒரு தமிழ்ப் படத்துல பாட்டே பாடணும்னு இருக்கேன். ஏன்னா, என்னோட முதல் தமிழ் படத்துலேயே தமிழ் ஆடியன்ஸ் என்னைத் திக்குமுக்காட வெச்சுட்டாங்க. 'ஊதா கலரு ரிப்பன்...’னாலே ரொம்பக் குஷி ஆயிடுறாங்க... சந்தோஷமா இருக்கு. இதுவரைக்கும் நான் ஊதா கலர் ரிப்பனே யூஸ் பண்ணது இல்லை தெரியுமா?''

0 comments:

Post a Comment

Bookmark Us

Delicious Digg Facebook Favorites More Stumbleupon Twitter

Search