வெஸ்ட்இண்டீஸ்– நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி டுடினில் நடைபெற்று வருகிறது. நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 609 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. டெய்லர் 217 ரன்னும், மேக்குல்லம் 113 ரன்னும் எடுத்தனர்.

நேற்றைய 4–வது நாள் ஆட்டத்தின் முடிவில் வெஸ்ட்இண்டீஸ் 2–வது இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 443 ரன் எடுத்து இருந்தது. பிராவோ 210 ரன்னும் டாரன்சேமி 44 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.இன்று 5–வது மற்றும் கடைசி ஆட்டம் நடந்தது. வெஸ்ட்இண்டீஸ் 507 ரன்னில் ‘ஆல்அவுட்’ ஆனது. பிராவோ 218 ரன்னும், டாரன்சேமி 80 ரன்னும் எடுத்தனர்.
112 ரன் இலக்குடன் நியூசிலாந்து 2–வது இன்னிங்சை ஆடியது. 4 விக்கெட் இழப்புக்கு 79 ரன் எடுத்து இருந்தபோது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. மழையால் நியூநிலாந்தின் வெற்றி பறிபோனது. தொடர்ந்து மழை பெய்ததால் டெஸ்ட் ‘சமநிலை’ ஆனது.
0 comments:
Post a Comment