Monday, December 2, 2013

குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் நடித்தவர்கள் பின்னர் பிரபல நட்சத்திர அந்தஸ்தை பிடிக்கின்றனர். சிலர் குழந்தை நட்சத்திரமாக இருந்த போது திறமையான முறையில் நடித்தாலும் வளர்ந்து பெரியவர்கள் ஆன பின்னரும் அவர்களில் சிலருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போய்விடுகிறது.திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் அதை சரிவர பயன்படுத்திக் கொள்ளாமல் நழுவ விட்ட நட்சத்திரங்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.லிட்டில் சூப்பர் ஸ்டாராக நடித்து பிரபல ஸ்டாராக உயர்ந்த நட்சத்திரங்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்களேன்.


உலகநாயகன் கமல்


02-1385963113-kamal343411-600
அப்பாவி குழந்தையாய் "அம்மாவும் நீயே அப்பாவும் நீயே"... என்று பாடிய கமல் இளைஞனாய் நடித்து... காதல் இளவரசனாய் ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். இன்றைக்கு உலக நாயகன் அந்தஸ்திற்கு உயர்ந்துள்ளார்.


ஸ்ரீதேவி


02-1385963135-sridevi223-600-jpg


அழகு குழந்தையாய் கொஞ்சும் மொழி பேசி நடித்த ஸ்ரீதேவி வளர்ந்து குமரியானதும் கோலிவுட், பாலிவுட் என நடிப்பில் கோலோச்சினார். 50 வயதிலும் ஹீரோயினாக நடித்து வருகிறார் ஸ்ரீதேவி.


மீனா


02-1385965282-meena232-600-jpg



அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் குழந்தை நட்சத்திரமாக ரஜினி அங்கிள் என்று நடித்த மீனா, வளர்ந்து குமரியானது அதே ரஜினிகாந்துடன் ஜோடியாக எஜமான், வீரா உள்ளிட்ட பல படங்களில் நடித்தார் 90 களில் பிரபல நாயாகியாக உயர்ந்த மீனா ரஜினி, கமல் மட்டுமல்லாது இளம் தலைமுறை நடிகரான அஜீத் ஜோடியாகவும் நடித்தார். இப்போது சின்னத்திரையில் நடுவராக வருகிறார்.


குஷ்பூ


02-1385963254-kushboo-new-600



பாலிவுட் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த குஷ்பு குமரியாக வளர்ந்த பின்னர் தென்னக திரை உலகில் சூப்பர் ஸ்டாரினியாக உயர்ந்தவர். ரசிகர்கள் கோவில் கட்டி கும்பிட்ட ஒரே நடிகை குஷ்புதான்.


ஷாலினி


02-1385965243-shalini324234-600-jpg


பேபி ஷாலினியாக நடித்த போது தனி ரசிகர் வட்டமே உண்டு. காதலுக்கு மரியாதை படத்தில் குமரி ஷாலினியாக நடித்தார். நடித்தது சில படங்கள்தான் என்றாலும் பேர் சொல்லும் படங்காளாக அமைந்தன. அமர்களம் படத்தில் அஜீத் உடன் ஜோடி சேர்ந்தவர் வாழ்க்கையிலும் ஜோடி சேர்ந்து விட்டார்.


சிம்பு


02-1385963312-simbu344-600-jpg


டி.ராஜேந்தரின் மகனான சிலம்பரசன் லிட்டில் சூப்பர் என்றே அழைக்கப்பட்டவர். இன்றைக்கு யங் சூப்பர் ஸ்டராக பட்டம் சூட்டப்பட்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.


 ஹன்சிகா மோத்வானி

02-1385963456-hansika-motwani-stills-600

சின்னத்திரையில் குழந்தை நட்சத்திரமாக நடித்து ஹிரித்திக் ரோசன் படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். குஷ்பு வழியில் இவரும் தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து பிரபல நட்சத்திரமாக உயர்ந்துள்ளார்.


நஸ்ரியா நஷீம்

02-1385963585-nazriya-nazim-600

குழந்தை நட்சத்திரமாக மலையாளப் படங்களில் நடித்தவர் நஸ்ரியா. ஏஷியா நெட் சேனலில் நிகழ்ச்சித் தொகுப்பாளரானார். கொஞ்சம் வளர்ந்த உடன் தாய்மொழியான மலையாளத்தில் ஹீரோயினாக நடித்தார். தமிழில் நேரம் மூலம் அறிமுகமாகி ராஜா ராணி, நையாண்டி என வரிசையாக பல படங்களில் நடித்து வருகிறார்.

0 comments:

Post a Comment

Bookmark Us

Delicious Digg Facebook Favorites More Stumbleupon Twitter

Search