
இந்த விழாவில் பேசிய தயாரிப்பாளர் கே ராஜன், 'திருட்டு விசிடி.காம் என்ற பெயரில் இன்டர்நெட்ல கோடிகோடியா சம்பாதிக்கிறான். ஆனால் தயாரிப்பாளர்களோ, தெருக்கோடில துண்டு போட்டுட்டு நிக்கிறாங்க. இதுக்கு ஒரு முடிவு கட்ட மாட்டீங்களா?" என்றார். அடுத்துப் பேச வந்த இயக்குநர் சேரன், "கேரளாவில், மும்பையில் இருக்கிற மாதிரி படம் ரிலீசாகிற அன்னைக்கே விசிடி, டிவிடியை வெளிட்டால் என்ன?," என்று கேள்வி எழுப்பியவர், "யாரோ திருட்டுப் பசங்க சம்பாதிச்சுட்டு போவதைத் தடுக்க, நம்ம பணம் கைக்கு வந்து சேர ஒரு புது முடிவு எடுத்திருக்கேன்.

யார் என்ன நினைச்சாலும் சரி. நான் தயாரிச்சு இயக்கும் ‘ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை' படத்தின் டிவிடி ரைட்ஸை, ரிலீஸ் அன்னைக்கே கொடுக்கப் போறேன். அதே நாள்ல இன்டர்நெட், யூ ட்யூப், டிடிஎச் எல்லாத்துலேயும் வெளியிடப் போகிறேன்," என்றார். விஸ்வரூபத்தை டிடிஎச்சில் வெளியிட கமல் முடிவு செய்த போது கிளர்ச்சி பண்ணவர்கள், சேரன் விஷயத்தில் என்ன செய்யப் போகிறார்களோ!

0 comments:
Post a Comment