
இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளின் முன்னாள் ஆணையரான க்கு இந்திய கிரிக்கெட் வாரியம் வாழ்நாள் தடை விதித்துள்ளது.
நிதி மோசடிகளில் ஈடுபட்டார் என்று அவர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
அந்தக் குற்றச்சாட்டுக்களை ஆராய்ந்த இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு, அவர் மீது முன்வைக்கப்பட்ட எட்டு குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என்று கண்டறிந்ததை அடுத்து, அவருக்கு வாழ்நாள் முழுவதும் கிரிக்கெட் விளையாட்டுடன் தொடர்புகளை பேணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்று சென்னையில் நடைபெற்ற கிரிக்கெட் வாரியத்தின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று மோடி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு டில்லி உயர்நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட நிலையில், கிரிக்கெட் வாரியக் கூட்டம் நடைபெற்று குறித்த முடிவு எடுக்கப்பட்டது.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை வடிவமைத்து அதை வெற்றிகரமாக நடத்தியவர் என்று, கிரிக்கெட் வாரியமே அவரை முன்னர் புகழ்ந்தது.
இதேவேளை, 2010 ஆம் ஆண்டு ஐ.பி.எல். போட்டிகளில், புனே மற்றும் கொச்சி ஆகிய இரண்டு புதிய அணிகள் சேர்க்கப்பட்டன. இது தொடர்பில் பெரும் சர்ச்சை எழுந்தது. அதற்கு லலித் மோடியே காரணம் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டது.
அப்போது கொச்சி அணியின் உரிமையாளர்கள் யார் என்பதை மோடி டுவிட்டரில் வெளியிட சர்ச்சை ஆரம்பித்தது. இதையடுத்து அப்போது வெளியுறவுத்துறை துணை அமைச்சராக இருந்த சஷி தரூர் பதவி விலகும் நிலை ஏற்பட்டது.
2010 ஆம் ஆண்டின் ஐ.பி.எல். போட்டியின் இறுதி ஆட்டம் முடிந்த பிறகு, மோடி அந்தப் போட்டியின் ஆணையர் பதவியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டார்.
அவரிடம் விளக்கம் கேட்ட கிரிக்கெட் வாரியத்தின் கடிதங்களுக்கு மோடி பதலளித்தார் என்றாலும், ஒழுங்கு நடவடிக்கை குழுவின் விசாரணைக்கு வருமாறு விடுக்கப்பட்ட அழைப்பை அவர் ஏற்கவில்லை.
இந்தியாவில் தனது உயிருக்கு ஆபத்து உள்ளது என்று கூறும், லலித் மோடி தற்போது லண்டனில் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment