• Enter Slide 1 Title Here

    This is slide 1 description. You can replace this with your own words. Blogger template by NewBloggerThemes.com...

  • Enter Slide 2 Title Here

    This is slide 2 description. You can replace this with your own words. Blogger template by NewBloggerThemes.com...

  • Enter Slide 3 Title Here

    This is slide 3 description. You can replace this with your own words. Blogger template by NewBloggerThemes.com...

Showing posts with label உலகம். Show all posts
Showing posts with label உலகம். Show all posts

Thursday, January 9, 2014



கடந்த வருடம் அமெரிக்காவை சேர்ந்த  Jessica Bennett என்ற பெண் தனது 19மாத Jonah என்ற கைக்குழந்தையுடன் விமானத்தில் பயணம் செய்தார். விமான பயணம் செய்துகொண்டிருந்தபோது குழந்தை Jonah  திடீரென அழுக ஆரம்பித்தது. இதனால் அருகில் தூங்கிக்கொண்டிருந்த Joe Rickey Hundley என்பவர் குழந்தை அழுகை சத்தத்தால் எரிச்சல் அடைந்து ஆத்திரத்தில் குழந்தையை அடித்துவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த Jessica Bennett விமான ஊழியர்களிடம் புகார் கூறினார்.

விமானம் தரையிறங்கியவுடன் Jessica Bennett, காவல்நிலையத்தில்  Joe Rickey Hundley மீது புகார் அளித்தார். அவருடைய புகாரின்பேரில் Joe Rickey Hundleyமீது போலீஸார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு கடந்த ஒரு வருடமாக அமெரிக்க நீதிமன்றத்தில் நடந்து வந்தது. Joe Rickey Hundley தனது தவறை ஒப்புக்கொண்டு தான் செய்த செயலுக்காக வருந்துவதாக நீதிபதியிடம் கூறினார்.

இருப்பினும் அவருக்கு நீதிபதி 8 மாத சிறைதண்டனை கொடுத்து நேற்று தீர்ப்பு அளித்தார். அந்த சம்பவத்தின்போது தனது குழந்தை மிகவும் பயந்துவிட்டதாகவும், இதுபோன்ற பொறுப்பற்றவர்களுக்கு இந்த தண்டனை அவசியம்தான் என்றும் தீர்ப்பு வெளியானவுடன் குழந்தையின் தாயார் Jessica Bennett செய்தியாளர்களிடம் கூறினார். தண்டனை பெற்ற Joe Rickey Hundley என்பவர் Unitech Composites and Structures, என்ற நிறுவனத்தின் தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Posted by V4Tamil .com on 1:19 AM in    No comments »

தனது 90 வயது தாயாரின் ஓய்­வூ­தியப் பணத்தைப் பெறு­வ­தற்­காக 54 வயது மக­னொ­ருவர், இறந்த தாயின் சட­லத்தை குளிர்­சா­தனப் பெட்­டியில் மறைத்து வைத்த சம்­பவம் பிரித்­தா­னி­யாவில் இடம்­பெற்­றுள்­ளது.
ஹம்­ஷி­யரில் போர்ட்ஸ்­மவுத் நகரில் வசிக்கும் பிலிப் பரோ என்ற நபரே, இயற்கை மர­ண­ம­டைந்த தனது தாயா­ரான லூஸி பரோவின் உடலை சட்­டப்­பி­ர­காரம் நல்­ல­டக்கம் செய்­யாது குளிர்­சா­தனப் பெட்­டியில் மறைத்து வைத்­துள்ளார்.

ஆரம்­பத்தில் பிலிப் தனது தாயாரை படு­கொலை செய்­தி­ருக்­கலாம் என சந்­தே­கிக்­கப்­பட்­டது. எனினும், லூஸியின் பிரேத பரி­சோ­தனை அறிக்­கைகள் அவர் இயற்கை மரணம் எய்­தி­யதை உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளன.
இந்­நி­லையில் தனது தாயார் இறந்து விட்­டதை மறைத்து அவ­ரது ஓய்­வூ­திய அனு­கூ­லங்­களைப் பெற்­றமை மற்றும் தனது தாயாரின் சட­லத்தை உரிய முறையில் நல்­ல­டக்கம் செய்யத் தவ­றி­யமை ஆகிய குற்­றச்­சாட்­டுகள் பிலிப் மீது சுமத்­தப்­பட்­டுள்­ளன.
பிரித்­தா­னிய சட்டப் பிர­காரம் பிலிப் தனது குற்றங்களுக்காக கால வரையறையற்ற சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிடு மென தெரிவிக்கப்படுகிறது.
Posted by V4Tamil .com on 1:01 AM in    No comments »

Thursday, December 5, 2013

அடுத்த வருடம் இடம்பெறவுள்ள உதைபந்தாட்ட உலகக்கிண்ணப் போட்டிகளை மையமாகக் கொண்டு கையடக்கத்தொலைபேசிச் சாதனங்களுக்கான மென்பொருள் FIFA அமைப்பு வெளியிடுகின்றது.

iPhone, iPad மற்றும் Android, சாதனங்களில் பயன்படுத்தக்கூடியதாகக் காணப்படும் இந்த மென்பொருள் மூலம் குறித்த போட்டிகள் தொடர்பான தகவல்கள், புகைப்படங்கள் என்பவற்றினை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டள்ளது.

இதே நேரம் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் எதிர்வரும் 2014ம் ஆண்டு ஜுன் 12ம் திகதி முதல் ஜுலை 13ம் திகதி வரை பிரேசிலில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


fifa_world-cup_app_001

Thursday, August 15, 2013

Marion-Bartoliவிம்பிள்டன் டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டம் பெற்ற வீராங்கனை மரியன் பர்டோலி ஓய்வுபெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.

கிராண்ட்ஸ்லாம் விருது பெற்று 40 நாட்கள் மாத்திரம் கடந்துள்ள நிலையில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஓய்வு பெறுவது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மரியன் பர்டோலி, தொடர்ச்சியான உபாதைகள் காரணமாக போட்டிகளில் தன்னால் கவனம் செலுத்த முடியவில்லை என்று தெரிவித்தார்.
28 வயதான பிரான்ஸ் வீராங்கனையான மரியன் பர்டோலி, உலக தரவரிசைப் பட்டியலில் 7ஆம் இடத்திலுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Bookmark Us

Delicious Digg Facebook Favorites More Stumbleupon Twitter

Search