Thursday, January 2, 2014



1arimanambi2கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் படம், அரிமா நம்பி.

விக்ரம் பிரபு, பிரியா ஆனந்த் ஜோடி.

ஒளிப்பதிவு, ஆர்.டி.ராஜசேகர்.

இசை, டிரம்ஸ் சிவமணி.

பாடல்கள்: புலமைப்பித்தன்,அறிவுமதி, நா.முத்துக்குமார், மதன் கார்க்கி. இயக்கம், ஆனந்த் ஷங்கர்.


இப்படத்தின் அறிமுக நிகழ்ச்சியில் விக்ரம் பிரபு பேசியதாவது:இவன் வேற மாதிரி, சிகரம் தொடு படங்களில் நடித்துக்கொண்டே இதில் நடித்தபோது, அந்த கேரக்டர்களில் இருந்து மாற சிரமப்பட்டேன். ஆனால், ஆனந்த் ஷங்கர் அற்புதமாக வேலை வாங்கினார்.




ஏற்கனவே அசிஸ்டென்ட் டைரக்டராகப் பணியாற்றிய அனுபவம் எனக்கு இருந்ததால், இந்தப்படத்தின் கேரக்டரையும், டைரக்டரின் எதிர்பார்ப்பையும் புரிந்துகொண்டு நடிக்க ஈசியாக இருந்தது.இந்த ஷூட்டிங் ஸ்பாட்டில், நான் ஏதாவது தவறாக நடித்துவிடுவேனோ என்ற படபடப்பில் இருந்தேன். சினிமாவில், தினமும் கற்றுக்கொண்டுதான் இருக்கிறேன். ஒவ்வொருவரிடம் இருந்தும் வித்தியாசமான விஷயங்களை தேடிப்பிடித்து கற்கிறேன். சண்டைக் காட்சிகளில் திலீப் சுப்பராயன் அதிக ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்றார். அதைக் கேட்காமல் ரிஸ்க் எடுத்து நடித்திருக்கிறேன். பிரியா ஆனந்துடன் நடிக்கும்போது, புது எனர்ஜி கிடைக்கும். அது காட்சிகளுக்கு மேலும் சிறப்பாக அமையும்.இவ்வாறு அவர் கூறினார்.




 

0 comments:

Post a Comment

Bookmark Us

Delicious Digg Facebook Favorites More Stumbleupon Twitter

Search